இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, June 24, 2013

உதவி பேராசிரியர் நியமனத்தில் பணி அனுபவம் கணக்கிடுவதில் தேர்வு வாரியம் புது நடைமுறை க

  உதவி பேராசிரியர் நியமனத்தில் பணி அனுபவம் கணக்கிடுவதில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய நடைமுறையால் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பணி அனுபவம், கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி அனுபவத் துக்கு 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் என மொத்தம் 34 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பணி அனுபவத்துக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அளிக்கப்பட உள்ளது. கல்வித்தகுதியில் பிஎச்டிக்கு 9 மதிப்பெண்களும், எம்.பில் பட்டத்துடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்களும், முதுகலை பட்டத்துடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண்களும் அளிக்கப்பட உள்ளன. மேலும் இந்த தேர்வில் ஸ்லெட், நெட், பிஎச்டி முடித்த நாளில் இருந்து பணி அனுபவத்தை கணக்கிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது

. இந்த நடைமுறையால் ஏற்கனவே அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முதல் ஷிப்டில் 500 பேரும், 2வது ஷிப்டில் 1,661 பேரும் கவுரவ விரிவுரையாளர்களாக உள்ளனர். இதில் முதல் ஷிப்டில் 110 பேர், 2வது ஷிப்டில் 250 பேர் என மொத்தம் 360 கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமே ஸ்லெட், நெட், பிஎச்டி முடித்துள்ளனர். அதிலும் 250க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் முடித்துள்ளதால், பணி அனுபவ மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 2,161 கவுரவ விரிவுரையாளர்களில் அதிக பட்சமாக 100 பேருக்கு மட்டுமே பணி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment