தேர்வுத்துறை இயக்ககத்தால் நடத்தப்படும் 10 ம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவர்களுக்கான சிறப்பு தேர்வின் 'ஆன் - லைன் ' விண்ணப்பத்திற்கான இணையதள 'சர்வர் ' மெதுவாக இயங்கியதால் பல மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாமல் தவித்தனர். ஏப்ரலில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத மாணவ,மாணவிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஜூனில் சிறப்புத் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் dge.tn.nic.in என்ற இணையதளத்தில் "ஆன் லைன் ' ல் விண்ணப்பிக்கவும், ஜூன் 3 முதல் 5 ம்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பலரும் ஜூன் 3 முதல் விண்ணப்பிக்கத் துவங்கினர்.
இரண்டு நாட்கள் எளிதாக "ஆன்லைனில்' விண்ணப்பித்தனர். கடைசி நாளான நேற்று விண்ணப்பித்தவர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். நேற்று காலை முதல் இணையதளத்தின் "சர்வர்' மிகவும் குறைவான வேகத்தில் இயங்கியதால், பெரும்பாலானோர் விண்ணப்பிக்க இயலாமல் தவித்தனர். நூற்றுக்கணக்காக மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் உள்ளனர். கவலையடைந்துள்ள பெற்றோர் சிறப்புத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதியையும், வங்கியில் பணம் கட்டும் தேதியையும் நீட்டிக்கக் கோரியுள்ளனர். இதே போன்று 12 ம் வகுப்பிற்கான மறு தேர்விற்கான ஆன்- லைன் விண்ணப்பதிற்கான கடைசி நாளன்றும், இதே பிரச்னையால் மாணவ, மாணவிகள் பலர் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாமல் போனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்து மாணவர்கள் நகர் பகுதிக்கு வந்து விண்ணப்பிப்பதற்குள் நேரம் முடிவடைந்து விடும். எனவே கூடுதலாக இரண்டு நாட்கள் அதிகரித்தால் தான் மாணவர்கள் முழுமையாக விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படும்.
No comments:
Post a Comment