பிளஸ் 2 கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய, நான்கு பாடங்களின் விடைத்தாள் நகல்கள், இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. நாளை வரை, விடைத்தாள் நகல்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது. நகல்: பிளஸ் 2 தேர்வில், பல்வேறு பாடங்களுக்கு, விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்கள், தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களின் விடைத்தாள் நகல் கேட்டுதான், அதிகளவில், விண்ணப்பித்துள்ளனர்.
வேதியியல் பாட விடைத்தாள் நகல், ஏற்கனவே, www.examonline. co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கடந்த, 2ம் தேதி, உயிரியல் பாட விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டது. நேற்று, இயற்பியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகிய, நான்கு பாடங்களின் விடைத்ததாள் நகல்களை, மேற்கூறிய இணைய தளத்தில், தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள், நாளை வரை, பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம். இதர பாடங்களுக்கான விடைத்தாள் நகல்கள், ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மறு மதிப்பீடு: வேதியியல் பாடத்தில், மறு மதிப்பீடு கோரி, 1,200க்கும் அதிமான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து, மறு மதிப்பீடு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 150 ஆசிரியர்கள், மறு மதிப்பீடு செய்யும் பணிக்காக, சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment