கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 3-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் முதல் வாரத்தில் கோடை வெப்பம் கடுமையாக இருந்ததால் பள்ளிகள் திறப்பது ஜூன் 10-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இப்போது கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படுகின்றன. பள்ளி தொடங்கும் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. ஆன்-லைன் மூலம் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாறுதல்களைப் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment