பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்படுகின்றன. அதே நாளில் அந்தந்தப் பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
சான்றிதழ் வழங்கப்படும் வியாழக்கிழமை முதல் 15 நாள்களுக்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதிக்கான பதிவு மூப்பே வழங்கப்படும். இதற்கு குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் வழங்க வேண்டும். இதன்மூலம், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை ஒரே நாளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment