எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஆண்டுகளைபோல இந்த வருடமும் கடுமையான போட்டி நிலவுகிறது. 18 அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு இடங்கள், 10 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 3000 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
இதையடுத்து ரேண்டம் எண் நாளை மறுநாள் (7-ந்தேதி) வெளியிடப்படுகிறது. விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரேண்டம் எண் கொடுக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிளஸ்-2 மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 10-ந் தேதி அன்று முடிவு வெளியாவதால் அதன் பிறகு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார். என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் 12-ந் தேதி வெளியாவதால் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் 13 அல்லது 14-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment