மாணவர்களுக்கு யோகா, தியானம், நீதி போதனைகள், உடல் நலம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை கற்றுத்தரும் வகையில் பாடவேளை நேரத்தில் மட்டுமே மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பள்ளி வேலை நாள்கள் மற்றும் விடுமுறை நாள்கள், பாடவேளை நேரங்களில் மாற்றம், காலை வழிபாடு முறை, உறுதிமொழிகள் ஏற்பு போன்றவை ஆசிரியர்களுக்கு விளக்கமிக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி நாட்காட்டி தயாரிக்கப்பட்டு்ளது.இந்த நாட்காட்டி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுப்பப்பட்டது.
இதில் பள்ளிகளின் கால அட்டவணை என்ற பெயரில் பள்ளி தொடங்கும் நேரம், ஒவ்வொரு பாடவேளைக்கும் ஒதுக்க வேண்டிய நேரம், யோகா, சுகாதாரக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி உள்ளிட்ட பாட இணைச் செயல்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.ஏற்கெனவே நீதிபோதனை வகுப்புகள் போன்றவற்றை நடத்துவதே இல்லை. அவற்றை நடத்த வேண்டும் என்பதற்காக புதிய பாடவேளை அட்டவணையும் வெளியிடப்பட்டது. பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்குப் பதிலாக காலை 9 மணிக்குத் தொடங்கப்படும். இதையடுத்து பள்ளி தொடங்கும் நேரம் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வந்தன.பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது மாதிரி கால அட்டவணை மட்டுமே.
பள்ளிகளின் நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் வெளியிட்ட அறிக்கையில்: பள்ளிகளில் படிக்கும் மணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நீதிபோதனை, உடல் நலக் கல்வி, கலைக் கல்வி, வாழ்க்கைக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, முதல் உதவி பயிற்சிகள், தற்காப்புபள்ளிக் கல்வி மாணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். நீதிபோதனை, உடல் நலக் கல்வி , கலைக் கல்வி, வாழ்க்கைக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத்தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.பள்ளிகளில் காலை வழிபாட்டுக்கூட்டம் நடத்தப்பட வேண்டிய முறை, தியானம், எளிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகா நீதிபோதனை உள்ளிட்ட வகுப்புகளுக்கு இடைவெளியைத் தருவதற்காக பாடவேளைகளில் 5 நிமிஷங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மதிய இடைவேளைக்கு பின்னர் வாய்ப்பாடு சொல்லுதல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதைக்கேட்டு எழுதுதல் மற்றும் வெள்ளிக்கிழமை இறுதிவகுப்பில் மாணவர்களின் தனித்திறன் செயல்பாடுகள் போன்றவை நடைபெற வேண்டும் எனவும் கூறப்பட்டது
. இதனை செயல்படுத்த பாடவேளை நேரங்களில் மாற்றம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதனால், அவர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து பாடவேளைகளை மாற்றி அமைக்கப்பட்டது. அதற்காக ஒரு மாதிரி பாட காலஅட்டவணையும் தயார் செய்யப்பட்டது. இதேபோன்று பாடவேளை நேரங்களை பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரத்திற்குட்பட்டு மாற்றியமைத்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பாடவேளை கால அட்டவணையில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன. எனவே தற்பொழுது வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தியாகும். பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பள்ளிகள் வழக்கமாக தற்பொழுது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும் என கே.தேவராஜன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment