மதிப்பெண் சான்றிதழ் 10–ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 27–ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சத்து 19 ஆயிரத்து 478 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேர், பள்ளி மாணவர்களாகவும், மற்றவர்கள் தனித்தேர்வர்களாகவும் தேர்வில் கலந்துகொண்டனர். தேர்வு முடிவு மே மாதம் 31–ந்தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் 89 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் ஜூன் 20–ந்தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.
அதன்படி மதிப்பெண் சான்றிதழ் 20–ந்தேதி வழங்கப்படும் என்றும் பிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
பிளஸ்–1 வகுப்புகள் தொடக்கம் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த 10–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் முடிவு மே 31–ந்தேதி வெளியிடப்பட்டது. அத்தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவ–மாணவிகளுக்கு 20–ந்தேதி வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், 2013–2014–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கும்.
No comments:
Post a Comment