அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். 5,500 காலி இடங்கள் தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர் மற்றும் பில் கலெக்டர், வரைவாளர், சர்வேயர் ஆகிய பதவிகள் குரூப்–4 தேர்வு மூலமாக நியமிக்கப்படுகின்றன. இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிறது.
இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குரூப்–4 தேர்வு மூலமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பப்படன. இந்த நிலையில், மேற்கூறப்பட்ட பதவிகளில் சுமார் 5,500 காலி இடங்கள் குரூப்–4 தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன. ஆகஸ்டு மாதம் தேர்வு இதற்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்டு மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. தேர்வு பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன. குரூப்–4 தேர்வு பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மட்டுமே உண்டு. நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு தொடக்க நிலையில் ஏறத்தாழ ரூ.14 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். இப்பணிகளுக்கு தேர்வுசெய்யப்படுவோர் பட்டதாரியாக இருந்தால் இரண்டு இன்கிரிமென்ட் அதாவது கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணியில் இருந்துகொண்டே துறைத்தேர்வுகள் எழுதி படிப்படியாக பதவி உயர்வும் பெறலாம்.
No comments:
Post a Comment