. தருமபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக முதல் தாளுக்கு 6 ஆயிரம் விண்ணப்பங்களும், இரண்டாம் தாளுக்கு 10 ஆயிரம் விண்ணப்பங்களும் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதால் பெரும்பாலான விண்ணப்ப மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. திங்கள்கிழமை காலையில் மட்டும் பல இடங்களில் வரிசையில் நின்று தேர்வர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.
கடந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டதாலும், இரண்டு தாள்களுக்கும் ஒரே விண்ணப்பம் என்பதாலும் முதல் நாளில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் விற்பனையாகின. சில இடங்களில் விண்ணப்பங்களும் தீர்ந்துவிட்டன. இந்த ஆண்டு விண்ணப்ப விநியோக மையங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருந்தாலும், முதல் நாளில் விற்பனை சற்றுக் குறைவாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனினும், ஓரிரு நாள்களில் விண்ணப்ப விற்பனை அதிகரிக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டாலும், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேரில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 5,600 விண்ணப்பங்கள் விற்பனை: சென்னை மாவட்டத்தில் முதல் தாளுக்கு 2,107 விண்ணப்பங்களும், இரண்டாம் தாளுக்கு 3,517 விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை 1 வரை விநியோகம்: அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அன்று மாலையே கடைசி நாள் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment