ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.முதல் நாளிலேயே 1.48 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 7.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
இதில் இன்று மாலை வரை சுமார் 5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாளான திங்கள்கிழமை(ஜூலை.1) ஏராளமானோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு 18-ம் தேதியும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment