மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் 98 ஆயிரத்து 500 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இந்தத் தேர்வு ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு கல்வி மாவட்ட மாணவர்களுக்கு செங்கல்பட்டில் உள்ள செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் கல்வி மாவட்ட மாணவர்களுக்கு காஞ்சிபுரம் அரசு சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னேரி கல்வி மாவட்ட மாணவர்களுக்கு டி.வி.எஸ். ரெட்டி மேல்நிலைப் பள்ளியிலும், திருவள்ளூர் கல்வி மாவட்ட மாணவர்களுக்கு கௌடி மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
சென்னை தெற்கு கல்வி மாவட்ட மாணவர்கள் அந்த மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்திலேயே (டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர்) விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். சென்னையில்... மத்திய சென்னை கல்வி மாவட்ட மாணவர்கள் மயிலாப்பூர் சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியிலும், கிழக்கு சென்னை கல்வி மாவட்ட மாணவர்களுக்கு ஹிந்து மேல்நிலைப் பள்ளியிலும், வட சென்னை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் வேப்பேரியில் உள்ள பெனடிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment