இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, June 15, 2013

வாக்கெடுப்பு முறை எப்படி நடைபெறும்?

் மாநிலங்களவைத் தேர்தலில் காலியாகும் இடங்களுக்கு அதிகமாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படுவது நிச்சயம். இந்த வாக்கெடுப்பு பொது மக்கள் தேர்தலில் வாக்களிப்பது போன்று இருக்காது. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வாக்கும் முன்னுரிமை அடிப்படையில் இருக்கும். அதாவது, முதல் வேட்பாளராக ஒருவரைத் தேர்வு செய்வது, இரண்டாவது வேட்பாளராக பட்டியலில் உள்ள மற்றொருவரைத் தேர்வு செய்வது என்று வரிசைக் கிரமமாக இருக்கும். அவ்வாறு வரிசைப்படி வாக்களித்த பிறகு அந்த வாக்குகள் எண்ணப்படும்.

அதன் விவரம் வருமாறு: மாநிலங்களவையின் ஒரு தேர்தலில் ஏழு இடங்களுக்கு பதினாறு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை 54 பேர் பெற்றுள்ளதாகக் கொள்ள வேண்டும். அப்போது, முதலில் தேர்வு பெறும் வேட்பாளருக்கு அதிகபட்ச வாக்கு மதிப்பு வழங்கப்படும். அதாவது, "அ' என்ற வாக்காளர் முன்னுரிமைப்படி முதலில் தேர்வு செய்யப்பட்டால் 11 வாக்கு மதிப்பைப் பெறுவார். மொத்தமுள்ள வாக்காளர்களான 54 என்பது 100-ஆல் பெருக்கப்பட்டு, அதனால் வரும் மதிப்பான 5,400 என்பதை எட்டால் (எட்டு என்பது காலியாக உள்ள 7 மாநிலங்களவை இடங்களுடன் ஒன்றைக் கூட்டி வருவது ஆகும்.) வகுக்க வேண்டும். அவ்வாறு வகுத்த பிறகு கிடைக்கும் மதிப்பு 675-டன், மீண்டும் ஒன்றைக் கூட்ட வேண்டும். அப்படிக் கூட்டினால் 676 என்ற மதிப்பு கிடைக்கும்.

இந்த மதிப்புதான் ஒருவர் எம்.பி. பதவியைப் பெறுவதற்கான வாக்கு மதிப்பாகும். மேலும் மாநிலங்களவைத் தேர்தலில் முன்னுரிமை அடிப்படையில் வெற்றி பெற்ற வேட்பாளர் வாக்கு மதிப்பு 11 என வைத்துக் கொண்டு, அதை 100-ஆல் பெருக்கினால் 1100 என்ற மதிப்பு வரும். அதில் வெற்றி பெறத் தேவையான 676-ஐ கழித்தால் 424 என்ற வாக்கு மதிப்பு மீதம் இருக்கும். இந்த மதிப்பு, அதிக வாக்குகள் பெற்றும்கூட வெற்றி வாய்ப்பைப் பெற முடியாத வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும். அவ்வாறு சேர்க்கப்படும்போது, வெற்றி பெறும் வாய்ப்பை அந்த வேட்பாளர் பெறுவார். இதுவே முன்னுரிமை அடிப்படையிலான வாக்கு முறையாகும்.

No comments:

Post a Comment