இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 31, 2019

5, 8ம் வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை


தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது. இதற்காக அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீதமிருக்கும் 40 மதிப்பெண்களுக்கு மூன்று பருவங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி எடுத்துக்கொள்ளப்படும் என்று தொடக்க கல்வி இயக்ககம் கூறியுள்ளது. 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்வு மையங்களை  பொறுத்தவரையில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான மாவட்ட தேர்வு குழு கண்காணிக்கும் என்றும் தொடக்க கல்வி இயக்ககம் கூறியுள்ளது. பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி, முதல் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படாது என்பதையும் தொடக்க கல்வி இயக்ககம் சுட்டிக்காட்டியுள்ளது.

Saturday, October 26, 2019

பள்ளி மாணவர்களுக்கு டெங்குவை தடுக்க இயக்குனரகம் உத்தரவு


டெங்கு பரவுவதை தடுக்க, பள்ளி மாணவர்களுக்கு, நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார். 

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தர்மபுரி மாவட்டங்களில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அதிகமாக கண்டறியப்பட்டுஉள்ளனர்.சுகாதார பணிடெங்கு பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள், பல்வேறு வகைகளில் உற்பத்தியாவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்து உள்ளது.சிமென்ட் தொட்டிகள், வாளிகள், கழிப்பறையில் திறந்திருக்கும் தண்ணீர் சேமிக்கும் உருளை, உடைந்த பாத்திரங்கள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள கட்டட பணிகள் ஆகியவற்றின் வழியாக, கொசுக்கள் பரவுவது தெரிய வந்துள்ளது. எனவே, டெங்குவை தடுக்கும் வகையில், பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும், நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். கொசுக்கள் பரவும் வகையில் உள்ள, சிதிலமடைந்த கட்டடங்களை அகற்ற வேண்டும். பள்ளிகளில் முறையான சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமைகளில் பள்ளி வளாகத்தை முழுவதுமாக துாய்மைப்படுத்தி, கட்டட கழிவுகள், தேங்கியிருக்கும் குப்பையை அகற்ற வேண்டும்.பள்ளிகளில் துாய்மை துாதர்களாக, மாணவர்களை நியமிக்க வேண்டும். சுகாதார துறை அதிகாரிகள் உதவியுடன், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, துாய்மை விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.


பள்ளிகளின் கூரைகளில், கொசுக்கள் பரவும் அம்சங்கள் உள்ளதா என்று பார்த்து, அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி கூரைகளின் மேற்பகுதியை புகைப்படம் எடுத்து, அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். பரிசோதனைதுாய்மை குறித்த அறிக்கையை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தயாரித்து, அதை, வாரந்தோறும் பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மாணவர்களுக்கு, தொடர்ந்து ஐந்து நாட்கள் காய்ச்சல் இருந்தால், மருத்துவமனைகளுக்கு சென்று, உடனடியாக பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்த வேண்டும்.டெங்கு, சிக்குன் - குனியா, மலேரியா மற்றும் வைரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை, பள்ளி ஆசிரியர்கள் வழியே, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, October 25, 2019

விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில் இன்று எம் பள்ளியில் நடத்தப்பட்டபோது..மாநகராட்சி துவக்கப்பள்ளிபூலுவபட்டி திருப்பூர் வடக்கு

தீக்கதிர் கட்டுரையில்நீர்த்துபோன செயல்வழிக்கற்றல்,அலுவல் வேலை,இஎம்ஐஎஸ் எனும் பூதம்,கற்றல் நேரக்கொள்ளை,பயிற்சிகள் குறித்த வாசிக்க வேண்டிய கட்டுரை

ஆதார் பதிவு முகாம் பள்ளிகளில் ஏற்பாடு


தபால் நிலையங்கள் வாயிலாக ஆதார் பதிவு முகாம் நடத்த பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் முக்கிய அடையாள எண்ணாக பயன்படுத்தப்படுகிறது.வங்கி கணக்கு சமையல் எரிவாயு உதவி தொகை திட்டங்கள் நல திட்டங்கள் மற்றும் பள்ளி கல்லுாரி மாணவர் சேர்க்கை தேர்வுகள் என அனைத்திற்கும் ஆதார் எண் பயன்படுத்தப் படுகிறது. இதையொட்டி பள்ளி கல்லுாரிகளிலேயே மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று உரிய விபரங்கள் சேகரிக்கப் படுகின்றன. அதனால் பள்ளிகளில் ஆதார் எண் பதிவுக்கான முகாம் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் ஒவ்வொரு பள்ளியும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட மண்டல தபால் அலுவலகங்கள் வழியே இந்த முகாம்களை நடத்துமாறு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tuesday, October 22, 2019

இன்று FA(B) test-OMR sheet முறையில் நடத்தினேன்.மிகுந்த உற்சாகத்துடன் விடையளித்தனர்.நன்றி சரவணன் சார்மாநகராட்சி துவக்கப்பள்ளிபூலுவபட்டி,திருப்பூர் வடக்கு

மாணவர்களின் வருகை பதிவுக்கு புது செயலி


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் வருகை பதிவுக்கு, 'ஆண்ட்ராய்டு' செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், பாட திட்ட மாற்றம், தேர்வு முறை மாற்றம் என, புதிய மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. இந்த வரிசையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப் பட்டது.

இதை உறுதி செய்யும் வகையில், ஆசிரியர்களின் வருகை பதிவை கண்காணிக்கவும், தில்லுமுல்லு இல்லாமல் பதிவேடுகள் பராமரிக்கப் படவும், ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் ஆனபின், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், இருப்பது குறைந்துள்ளதாக, அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, மாணவர்களின் வருகையை முறைப்படுத்தும் வகையில், ஆண்ட்ராய் செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. பள்ளி கல்வி துறையின் கல்வி மேலாண்மை தகவல் தளத்தின் வாயிலாக, இந்த செயலி இணைக்கப்பட்டுள்ளது.எனவே, 'மாணவர்களின் தினசரி வருகை பதிவை, தலைமை ஆசிரியர்களும், வகுப்பாசிரியர்களும் செயலியின் வழியாக, பதிவு செய்ய வேண்டும். 'அந்த பதிவு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்' என, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குனரகம், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

*பொதுத் தேர்வு - மூன்று மணி நேரமானது!*10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு!- பள்ளிக்கல்வித்துறை!

2020 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்

TRB newsஉதவி பேராசிரியர் பணிக்கு இணைய வழியே விண்ணப்பிக்க 15-11-19 வரை காலநீட்டிப்பு

Monday, October 21, 2019

குரூப் 2: முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற புதிய நடைமுறை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


குரூப் 2 போட்டித் தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் திங்கள்கிழமை வெளியிட்டார்.

முதனிலைத்தேர்வு: முதனிலைத்தேர்வுக்கு ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. தமிழகத்தின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழுள்ள அலகுகள் -8, 9 ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

மாத இறுதியில் வெளியீடு: தேர்வர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் முதனிலைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இந்த மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும்.

முதன்மை எழுத்துத் தேர்வு: முந்தைய மாற்றத்தின்படி, முதன்மைத் தேர்வானது ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத்தேர்வின் பகுதி-அ (டஹழ்ற்-அ) மட்டும் தனித்தாளாக, தகுதித்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

அதாவது தமிழில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு செய்யும் பகுதியானது 100 அதிகபட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடைபெறும். இந்தத் தேர்வில் தகுதிபெற 25 மதிப்பெண்கள் அவசியம் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற்றால் மட்டுமே இரண்டாவது தாள் மதிப்பீடு செய்யப்படும். தகுதித் தேர்வு தரம் மாற்றம்: தகுதித்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்வரின் தரவரிசை நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம் பட்டப் படிப்பிலிருந்து பத்தாம் வகுப்பு தரத்துக்கு இப்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரிந்த மாணவர்களால் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பகுதியைத் தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் இரண்டாவது தாள் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

முன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது இப்போது 300 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும். விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முதனிலைத் தேர்விலும் முதன்மை எழுத்துத் தேர்விலும் வெற்றிபெற வேண்டுமாயின் தேர்வர்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

குரூப் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் ஏன்? குருப் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்ட விளக்கம்: அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழி அறிவுத்திறன், கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே, தீவிரமாக விவாதித்து குரூப் 2 தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன பல்வேறு துறைத் தலைவர்கள், தமிழ் பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி, அரசுத்துறைகளின் தேவைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டன. பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Saturday, October 19, 2019

மாணவா்களுக்கான காய்கறித் தோட்டம்: அனைத்துப் பள்ளிகளிலும் அமைக்க மத்திய அரசு உத்தரவு


அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த, மாணவா்களுக்கான காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடா்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஊட்டச்சத்து மிகுந்த மாணவா்களுக்கான காய்கறித் தோட்டங்களை உருவாக்க வேண்டும். தோட்டத்தை உருவாக்கத் தேவையான விதைகள், மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் முறையான பயிற்சி ஆகியவை வழங்கப்படும். இதற்கு, ‘கிரிஷி விக்யான் கேந்திரா’ (அறிவியல் தோட்ட மையம்), தோட்டக்கலைத் துறை, விவசாயத் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து மையம், மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் வனத்துறையின் உதவியையும் வழிகாட்டுதலையும் பெற்றுக்கொள்ளலாம்.

தோட்டத்துக்கான எல்லைச் சுவரை அமைப்பது, நிலத்தைச் சமப்படுத்துவது ஆகியவற்றுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள்கள் வேலை) தொழிலாளா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிகளில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தவும், நகரமயமாகி வரும் சூழலில் நமக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே உருவாக்கிக் கொள்ளும் திறனை வளா்த்துக் கொள்ளவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெருகிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும் காய்கறித் தோட்டத்துக்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, October 17, 2019

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்


அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும், அதே வேளையில் அவா்கள் விரும்பினால் வசிப்பிடங்களுக்கு அருகில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட கல்வி இணைச்செயல்பாடு பாடப்பிரிவுகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.இவா்களுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், இரண்டாவது முறையாக 2017-ஆம் ஆண்டு ரூ.700-உம் ஊதிய உயா்வு வழங்கப்பட்டன. இதன்படி தற்போது ரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியமாக பெற்று வருகின்றனா். கடந்த 8 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ஊதிய உயா்வு வழங்கப்பட்டது.

தொகுப்பூதியம் குறைவு, பணி நிரந்தரம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பகுதிநேர ஆசிரியா்களின் எண்ணிக்கை 11,500 ஆகக் குறைந்துள்ளது.இருப்பினும் ஏழாவது ஊதியக்குழு அரசாணையின்படி 30 சதவீத ஊதிய உயா்வு, அரசு ஊழியா்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் வழங்கப்படுவதைப்போல பண்டிகை போனஸ், பணியின்போது இறந்தவா்களுக்கு இழப்பீடு, பணி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன்கள், மே மாத ஊதியம், பகுதிநேர பெண் ஆசிரியா்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இது தொடா்பாக பகுதிநேர ஆசிரியா்களின் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

பள்ளிகளில் கற்றல் உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்: ஆசிரியா்களுக்கு உத்தரவு


ஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் எளிதாக பாடங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வழியாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கணித, அறிவியல், ஆங்கில உபகரணப் பெட்டிகள், புத்தகங்கள், அகராதிகள், மடிக்கணினி, விளையாட்டு பொருள்கள், பயிற்சி கையேடுகள் உள்பட பல்வேறு வகையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதேநேரம் துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட போது வகுப்பறைகளில் இத்தகைய உபகரணங்கள் பயன்பாட்டில் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர, பொதுமக்களின் பங்களிப்பில் பெறப்படும் தளவாடப் பொருட்கள் மற்றும் கல்விச்சீா் மூலம் கிடைக்கும் உபகரணங்கள் பள்ளிகளில் சரிவர பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி பாடம் கற்பித்தால்தான் மாணவா்களின் கற்றல் திறன் மேம்பாடு அடையும். மேலும், தேசிய அடைவுத் தோ்வுகளை எளிதில் எதிா்கொள்ள உதவியாக இருக்கும். எனவே, ஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். இவற்றை மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியா் பயிற்றுநா்கள், குறுவள மைய ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியா்கள் அவ்வப்போது கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, October 16, 2019

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றம்: என்.சி.இ.ஆர்.டி.,


புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 14 ஆண்டு கால பள்ளிபாடத் திட்டங்களை மாற்ற, என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளது. தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது. 14 ஆண்டுஇந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், ருஷிகேஷ் சேனாபதி, டில்லியில் கூறியதாவது:

தேசிய அளவில், பள்ளி பாடத் திட்டங்களை, 1975, 1988, 2000, 2005 ஆகிய ஆண்டுகளில், என்.சி.இ.ஆர்.டி., மாற்றியமைத்துள்ளது.கடந்த, 14 ஆண்டுகளாக அமலில் உள்ள, பள்ளி பாடத் திட்டத்தை, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இம்மாத இறுதியில், ஆய்வு கமிட்டி அறிவிக்கப்படும். ஆய்வு கமிட்டிபுதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டவுடன். ஆய்வு கமிட்டி, தேசிய அளவில் பள்ளி பாடத் திட்டங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி, ஆய்வு செய்து முடிவெடுக்கும்.

என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தங்களையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியை சுமையாக கருதாமல், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்கும் வகையில், பாடத் திட்டங்கள் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார். பள்ளிகளில் நீர் மேலாண்மை'பள்ளிகளில் நீர் மேலாண்மையை செயல்படுத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.டில்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உட்பட, நாட்டில், 21 நகரங்களில், நிலத்தடி நீர் வற்றி விடும் அபாயம் உள்ளது என, 'நிடி ஆயோக்' எச்சரித்துள்ளது.

Tuesday, October 15, 2019

பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்


பருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை முதல் டிசம்பர் இறுதி வரை, வெளுத்து கட்டும் என, கணிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், வட மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. தொடர்ந்து, பல நாட்கள் மழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு, மழையால் அவ்வப்போது விடுமுறை விடப்படும். இந்தாண்டு பருவமழையால், விடுமுறை விடப்பட்டால், அதை சமாளிக்கும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை ஆலோசனை கூறியுள்ளது.

இரண்டாம் பருவ தேர்வுகள், டிசம்பரில் நடத்தப்படும் நிலையில், அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவ மழையால் பள்ளி வேலைநாட்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் பாதிக்காமல், கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.

Thursday, October 10, 2019

ஆசிரியர்கள் இடமாறுதல் கல்வி துறை நிபந்தனை


அரசு பள்ளி ஆசிரியர்கள், மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, பணி மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்' என, தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும், மே மாதம் பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம். ஓரிடத்தில், ஓராண்டு பணி முடித்தாலே, இடமாறுதல் கேட்கலாம் என, விதி இருந்தது.இதனால், பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டதால், குறைந்தபட்சம்,மூன்றாண்டுகள் ஓர் இடத்தில் பணிபுரிவோர் மட்டுமே, இடமாறுதல் கேட்க முடியும் என, பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது.

இதை எதிர்த்து, ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்ததால், நடப்பு கல்வியாண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, வழக்கு முடிவுக்கு வந்ததால், கவுன்சிலிங் நடத்துவதற்கான, புதிய அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:அனைத்து ஆசிரியர்களும், தற்போது பணியாற்றும் பள்ளிகளில், குறைந்த பட்சம், மூன்றாண்டுகள் பணி முடித்திருந்தால் மட்டுமே, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.

வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும், 2017 - 18 மற்றும், 2018 - 19ம் ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்காமல் இருந்தால், இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இந்த சலுகை, இந்த ஆண்டுக்கு மட்டுமே உண்டு. மற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும், மூன்றாண்டு பணிபுரிய வேண்டும் என்ற, நிபந்தனை கட்டாயம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 07, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் கட்டாயம்


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது கட்டாயம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிர்வாகம், பாடம் கற்பித்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், டிஜிட்டல் தளத்துக்கு மாற்றப்படுகின்றன.மின்னணு ஆளுமையில், பள்ளி கல்வித் துறை முன்னோடியாக செயல்பட, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இதன்படி, ஸ்மார்ட் போன் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு;

புத்தகங்களில் உள்ள பாடங்களை வீடியோவாக பயன்படுத்துதல் மற்றும் பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களை பதிவிறக்கம் செய்வது போன்ற திட்டங்களும், அமலுக்கு வந்துள்ளன.அதேபோல, மாணவர்களுக்கு நவீன கற்பித்தல் முறையை வழங்க,மத்திய அரசின் சார்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' மற்றும் மொபைல் போன் செயலிகள் வழியாக, சிறப்பு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும், டிஜிட்டல் செயல்பாடுகளை அதிகரிக்கவும், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமான, 'சமக்ர சிக் ஷா' துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

Friday, October 04, 2019

ஆசிரியர் இடமாறுதல் 3வது வாரம் துவக்கம்


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இம்மாதம், மூன்றாவது வாரத்தில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். காலியாக உள்ள இடங்களில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் அறிவிப்பின் போது, தமிழக பள்ளி கல்வித்துறை, புதிய விதிகளை அறிவித்தது. அதன்படி, அரசு ஊழியர்களை போல, ஆசிரியர்களும் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள், ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். இதை எதிர்த்து, ஆசிரியர்கள் பலர், நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைகளால், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், நான்கு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கவுன்சிலிங் நடத்துவதற்கு, சென்னை உயர் நீதிமன்றத் தில், சட்டப்பூர்வ அனுமதியை, பள்ளி கல்வித்துறை கேட்டுள்ளது. இந்த உத்தரவு கிடைத்ததும், இம்மாதம், 3வது வாரத்தில் கவுன்சிலிங் நடவடிக்கைகளை, பள்ளி கல்வித்துறை துவக்க உள்ளது. இந்த கவுன்சிலிங்கில், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியில், மாற்றம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.