தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த 2012 ஜூலையில், 10 ஆயிரத்து 500 இளநிலை உதவியாளர், தட்டச்சர்,சுருக்கெழுத்தர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், வெளியிடப்பட்டது. டிசம்பர் மாதம் கவுன்சிலிங் நடந்தது. அதை தொடர்ந்து அவர்கள் பணியில் சேரத்தொடங்கினர். இந்நிலையில் டிசம்பர் மாதம் நடந்த கவுன்சிலிங்கில், பங்கேற்று பணியிடங்களை தேர்வு செய்த 600 பேரை, மீண்டும் மறு கவுன்சிலிங்கிற்கு வருமாறு பிப்ரவரி மாதம் அழைத்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த 600 பேரும், மீண்டும் மறு கவுன்சிலிங் சென்றனர். அப்போது, அவர்கள் தேர்வு செய்திருந்த துறை, மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, வேறு துறை, மாவட்டங்களில் காலி பணியிடம் காட்டப்பட்டது. காரணம் கேட்டபோது,அங்கு தான் காலி பணியிடங்கள் உள்ளதாக,கூறப்பட்டது. இதை தொடர்ந்து, 500 பேர் மறு கவுன்சிலிங்கில் பங்கேற்று, புதிய பணியிடங்களை தேர்வு செய்து பணியில் சேர்ந்தனர். மீதமுள்ள 100 பேர், எங்களால் புதிய இடங்களுக்கு செல்ல முடியாது. ஏற்கனவே தேர்வு செய்த மாவட்டங்களில், வேறு துறையிலாவது பணியிடம் தாருங்கள், என்று கேட்டனர். அதற்கு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தற்போது இயலாது. மீண்டும் உங்களை கவுன்சிலிங் அழைப்போம். அப்போது வாருங்கள், என கூறி அனுப்பினர். அதன்படி மீதம் உள்ள 100 பேருக்கும்,நாளை (ஜூன் 14) சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் கவுன்சிலிங் நடப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment