இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 17, 2015

இன் ஜினியரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பஸ்களில் சலுகை

தமிழகத்தில் உள்ள 538 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 658 இடங்களுக்கு, 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளது. வரும் 19ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். 28ம் தேதி கலந்தாய்வு தொடங்கும்.

கவுன்சலிங் கடிதத்துடன் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். உரிய தகுதியிருந்தும் கடிதம் கிடைக்காதவர்கள் கலந்தாய்வு தொடங்குவதற்கு 2 மணிநேரம் முன்பு பல்கலைக்கழகத்திற்கு வந்தால் அவர்களுக்கு உரிய அழைப்பு கடிதம் வழங்கப்படும். இன்ஜினியரிங் மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடக்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும். இதற்காக மாணவர்கள், தங்களின் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்காக வந்திருக்கும் அழைப்பு கடிதத்தை (ஒரிஜினல்) அரசு பேருந்து நடத்துனரிடம் காட்ட வேண்டும். அப்படி காட்டும் பட்சத்தில் நடத்துனர் மாணவருக்கும் அவருடன் வரும் ஒருவருக்கும் பயண கட்டணத்தில் பாதி சலுகை அளிப்பார். அதாவது, இருவரும் பயண கட்டணத்தின் பாதியை கட்டணமாக செலுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கலந்தாய்விற்காக வரும் மாணவர்களில், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் ரூ.1000மும், மற்ற பிரிவினர் ரூ.5 ஆயிரமும் கட்டணமாக கட்டி அதற்காக ரசீதை பெற்று கொள்ள வேண்டும்.

இதனை கலந்தாயிவின் போது இணைக்க வேண்டும். இந்த கட்டணம், மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த பின்னர் கல்வி கட்டணம் கட்டும் போது சமன் செய்து கொள்ளப்படும். இன்ஜினியிரிங் மாணவர்கள் சேர்க்கையினை முன்னிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து கல்லூரிகளின் நிலை, சீட்டுகளின் இருக்கையை தெரிந்து கொள்ளும் வகையில் பிரமாண்ட டிவிக்கள் பொருத்தப்பட்ட டிஸ்பிளே ஹால் அமைக்கப்படும். மேலும், மாணவர்களுக்கு தேவையான கேன்டீன் வசதி, கழிப்பிட வசதி, பாதுகாப்பிற்காக போலீஸ் பூத், தீயணைப்பு வண்டி, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கலந்தாய்வு ஒரு நாளைக்கு 8 பிரிவுகளாக நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 500 முதல் 700 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு பிரிவிற்கு கலந்தாய்வு முடிந்தவுடன் கல்லூரிகளில் சீட் இருப்பு, நிரம்பிய இடங்கள், துறைவாரியாக, கல்லூரி வாரியாகவும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். அதேபோல, கவுன்சலிங் நடைபெறம் அறை முழுவதும் ரகசிய கேமிராக்கள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். கவுன்சலிங் அரங்கில் செல்போன் பேச அனுமதி கிடையாது. இதேபோல, அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சாதாரண உடையில் போலீசார் இருப்பார்கள். இவர்கள் பல்கலைக்கழகத்தை தீவிரமாக கண்காணித்தபடி இருப்பார்கள். பல்கலைக்கழக நுழைவு வாயில் பகுதியிலோ அல்லது பல்கலைக்கழகத்தின் உள்ளேயே யாரும் குறிப்பிட்ட கல்லூரியில் சேர வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட கூடாது. அதபோல, தனியார் கல்லூரிகள் தொடர்பான துண்டு பிரசுரங்களும் இந்த பகுதிகளில் வழங்க கூடாது.

இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் போலீசாரால் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பிற மாநிலத்தவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் படித்திருந்தாலும், அவர்களுக்கு இன வாரியான இட ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது. அவர்கள், எந்த ஜாதியாக இருந்தாலும், அவர்கள் “ஓசி” (ஓப்பன் காம்பட்டிஷன்) என்ற பிரிவின் அடிப்படையிலேயே எடுத்து கொள்ளப்படுவார்கள். அதன் அடிப்படையிலேேய அவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். அதேபோல, விண்ணப்பத்துடன் ஜாதி சான்றிதழ் இணைக்காதவர்களும் ஓசி பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்கள் கலந்தாய்வின் 2 நாட்களுக்கு முன்னர் தங்கள் ஜாதி சான்றிதளை ஒப்படைத்து உரிய சலுகைகளை பெறலாம்.

அனைத்தும் பார்கோட் மயம் பொறியியல் கலந்தாய்வு இந்தமுறை அனைத்திலும் பார்கோடை பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பார்கோடை ஸ்கேன் செய்ததுமே அவர்களுக்கான அனைத்து தகவல்களும் கணிணியில் பதிவாகிவிடும்.

இதனால், ஒவ்வொரு முறையும் புதிதாக என்ட்ரி செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 2 மணி நேரம் முன்பே வரவேண்டும் பொறியியல் கலந்தாய்விற்கு தகுதி பெறும் மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும். அந்த கடிதத்தில், அவர்களுக்கு என்ன தேதியில், எந்த நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட அந்த நாளில், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 2 மணிநேரம் முன்னதாக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வரவேண்டும்.

No comments:

Post a Comment