மதுரை, கோவையில் நடந்த பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் பணிகள் முடிவடைந்தன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட்டன. மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தேர்வுத்துறைக்கு வந்தன. வழக்கமாக, சென்னையில்தான் மறுமதிப்பீடு, மறுகூட்டல் செய்யப்படும்.
ஆனால் இந்த ஆண்டு சென்னையை தவிர்த்து மதுரை, கோவையில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, மறுமதிப்பீடு, மறுகூட்டல் செய்யப்பட்டது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இணை இயக்குனர் அமுதவல்லி தலைமையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு தாளும் 3 ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டது.
5 ஆயிரம் விடைத்தாள் மறுமதிப்பீடும், 4 ஆயிரம் விடைத்தாள் மறு கூட்டலும் செய்யப்பட்டன. கடந்த 7ம் தேதி பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. இதுகுறித்த விவரம் தேர்வுத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என அமுதவல்லி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment