ஏ. டி.எம். கார்டு என்பது நமக்கு மிகவும் வசதியாகிவிட்டது. அதுபற்றி தனியாகக் கூற வேண்டியதில்லை. ஆனால் எது மிகவும் வசதியாக இருக்கிறதோ, அதில் ஜாக்கிரதையாகவும் இருப்பது அவசியம். இல்லாவிட்டால், பாதிப்பும் பலமாக இருக்கும். இந்த விதி, ஏ.டி.எம். கார்டுக்கும் பொருந்தும். ஏ.டி.எம். கார்டு தொடர்பாக எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
ஒரு பார்வை… கார்டு தொலைந்தால்… சிலர் ஏ.டி.எம். கார்டை தொலைத்துவிட்டு, அது தொலைந்தது கூடத் தெரியாமல் பல மணிநேரம் இருப்பார்கள். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருக்கும். ‘பின் நம்பரை’ அறிவதற்கு எல்லாம் இன்று பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எனவே அலட்சியமாக இருக்காமல், ஏ.டி.எம். கார்டு தொலைந்துவிட்டால் அதை உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை ‘பிளாக்’ செய்வது மிகவும் முக்கியம்.
இப்படியும் நடக்கலாம் சில சமயங்களில் ஏ.டி.எம். மையத்தில் நம் பின்னால் நிற்கும் ஆட்களோ, காவலாளி போன்று தோன்றுபவர்களோ இயல்பாக எட்டிப் பார்த்து நம் பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே அதற்கு இடம்கொடாதீர்கள். ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வரும்போது, நம்மிடம் கார்டு இருக்கிறதா என்று உறுதி செய்துகொண்டு வெளியேறுவது நல்லது. சில நேரங்களில் உங்கள் செல்போன் எண்ணுக்குச் சிலர் அழைத்து, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை ‘பாதுகாப்புக்காக’ விசாரிப்பதற்காக கூறி கேட்பார்கள். யோசிக்காமல் நாம் அந்தத் தகவல்களை அளித்துவிட்டால், உடனடியாக டூப்ளிகேட் கார்டை தயாரித்து மோசடியில் ஈடுபடக்கூடும். வங்கி அல்லது அது சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து இதுபோல தொலைபேசியில் விசாரிப்பதில்லை. எனவே, ஒரு நொடி கூட யோசிக்காமல் மறுத்துவிடுங்கள்.
அதேபோல, நமது ஏ.டி.எம். கார்டை பிறரிடம் கொடுத்து பணம் எடுக்கச் சொல்வதையும் தவிர்க்க வேண்டும். ‘பின் நம்பர்’ கவனம் முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத மாதிரி அமைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக தொலைபேசி எண் போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண்களைத் தவிர்க்க வேண்டும். பாஸ்வேர்டு மறந்துவிடும் என ஏ.டி.எம். கார்டின் பின்புறத்திலேயே அதை எழுதிவைக்க வேண்டாம். ‘ஸ்கேனிங்’ திருட்டு நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதில் உள்ள ‘சிப்’பில்தான் விவரங்கள் பதிந்திருக்கும். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் செருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்டு தயாரித்து மோசடி செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது.
எனவே கார்டை கொடுத்து பில் போடச் சொல்லும் இடங்களில் ஒரு கண் வைத்திருங்கள். ஆன்லைனில்… ஏ.டி.எம். எண், பாஸ்வேர்டை இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா என உறுதிப் படுத்திக்கொள்வது அவசியம். இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை அறவே தவிர்த்துவிடுங்கள்.
No comments:
Post a Comment