புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் நடந்து வருகிறது. பல மாவட்டங்களில், மாணவர் சேர்க்கையின் போது, பிறப்புச் சான்றிதழ் அல்லது பதிவுச் சான்றிதழ், இடைப்பட்ட வகுப்பாக இருந்தால் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை கேட்கப்படுகின்றன. அதேநேரம், மாணவர்களின் ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டை நகலும், பள்ளிகளில் கட்டாயம் கேட்கப்படுவதாகவும், ஆதார் எண் இல்லாதவர்களுக்கு சேர்க்கை தர மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலகங்களில், பெற்றோர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு எச்சரிக்கை கடிதங்களை, கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். மாணவர் சேர்க்கைக்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது பதிவுச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் தவிர, ஆதார் எண் அல்லது நகல் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment