அரசுதேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிக்கை: நடைபெறவுள்ள ஜூன், ஜூலை-2015 பிளஸ் 2 தேர்வெழுத அரசு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) நாளை முதல் www.tndge.in. என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
www.tndge.in. என்ற இணையதளத்துக்கு சென்று HIGHER SECONDARY EXAM JUNE-JULY-2015 pRIVATE CANDIDATE HALL TICKET PRINT OUT-ஐ கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது மார்ச் 2015 பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வர வேண்டும்.
அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்விற்கு வருகை தர வேண்டும். மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ் )பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment