இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 06, 2013

கவுன்சிலிங் முன்னேற்பாடுகளில் அண்ணா பல்கலை தீவிரம் : 22ம் தேதி முதல் விண்ணப்பங்கள

   வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, மும்முரமாக நடந்து வருகின்றன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ள இந்த தேர்வின் முடிவுகள், மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, மே 10ம் தேதி முதல், 15ம் தேதிக்குள் வெளியிடப்படுகின்றன.

கடந்த ஆண்டு மட்டும், வழக்கத்திற்கு மாறாக, மே 22ம் தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, எல்லாமே தள்ளிப்போயின. இந்த ஆண்டு அதுபோல் நடக்காது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மே 15ம் தேதிக்குள், தேர்வு முடிவை வெளியிட்டுவிடுவோம் என, துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.,), நாடு முழுவதும், ஆகஸ்ட் 1ம் தேதி, பொறியியல் வகுப்புகள் துவங்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், செப்டம்பர் முதல் தேதி தான், வகுப்புகள் துவங்குகின்றன. ஜூலை இறுதி வரை, கலந்தாய்வு நடப்பது தான், இதற்கு காரணம்.

ஏ.ஐ.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு, ஆகஸ்ட் 1ம் தேதியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும், முன்கூட்டியே எடுக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment