அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவரும் ஏழை வீட்டு குழந்தைகள் என்ற காரணத்தினால் அவர்களின் கல்விக்கான செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. அரசின் சார்பில் 4 செட் விலையில்லா சீருடை, புத்தகம், வண்ணப் பென்சில்கள், புத்தகப் பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், காலணிகள், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.கோடீஸ்வரன் கையில் இருந்த மடிக்கணினி தற்போது அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவனின் கையிலும் தவழுவதற்கு வழிவகை செய்தவர் முதல்வர் ஜெயலலிதா.கல்வியில் இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் 13 வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை கண்காணிக்க வேண்டும். பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து தருகிறது. அரசுப்பள்ளிகளில் 21,000 புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.17,000 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தனியார் பள்ளிக்கு இணையான கட்டடமைப்புகள், தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து நிறைய கனவுகளுடன் இருப்பார்கள். மாணவ, மாணவியர்கள் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment