கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டத்தை அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு மானியம் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது சென்னையில் ரூ.398க்கு வழங்கப்படுகிறது. இதில் ஒரு சிலிண்டருக்கு மானியமாக மத்திய அரசு, 490 ரூபாய் 50 காசுகள் ஒதுக்கீடு செய்கிறது. இந்தியா முழுவதும் 14 கோடி வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. இதற்கான மானிய தொகையை, மத்திய அரசு அந்தந்த நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கி வருகிறது.
நேரடி மானிய உதவி இந்த மானிய தொகையை, இனிமேல் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்தியா முழுவதும், 20 மாவட்டங்களில் நேரடி மானிய திட்டத்தை அடுத்த மாதம் (மே) 15–ந் தேதிக்குள் பரீட்சார்த்தமாக அமல்படுத்தும் பணிகள் நடக்கிறது. அதன்படி கியாஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள், தங்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். மானிய தொகையை பொதுமக்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தி விடும். ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் இந்த திட்டத்தின்படி ஒரு நுகர்வோருக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மானிய திட்டத்தில், ஒரு இணைப்பு வருடத்துக்கு 9 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை சிலிண்டருக்கு மட்டும் மானிய தொகை கிடைக்கும்.
இந்த திட்டம் அமல்படுத்தப்படும்போது, பொதுமக்கள் கியாஸ் சிலிண்டரை முழு விலை கொடுத்து வாங்க வேண்டும். உதாரணமாக டெல்லியில் தற்போது மானியத்துடன் சேர்த்து ஒரு சிலிண்டரின் விலை 901 ரூபாய் 50 காசுகள். இந்த விலைக்கு நுகர்வோர், கியாஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். இதற்கான மானிய தொகையை பின்னர் மத்திய அரசு, வங்கி கணக்கில் செலுத்தும்.
No comments:
Post a Comment