- மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் அக விலைப்படி உயர்வு நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 72 சதவீத அக விலைப்படி பெற்று வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வு காரணமாக 2013ம் ஆண்டின் முதல் 6 மாதத்துக்கு அகவிலைப்படி 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீத மாக, அதாவது 8 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்தது.
கடந்த 10 தினங்களுக்கு முன்பே இது பற்றி மத்திய மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அது ஒத்திப் போடப்பட்டது. இந்த நிலையில் மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் 8 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியில் இருந்து 8 சதவீத அகவிலைப்படி பெறும் வகையில் முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். எனவே மத்திய அரசு ஊழியர்கள் பெறும் சம்பளம் உயரும். இதனால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், சுமார் 30 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.
No comments:
Post a Comment