தமிழகத்தில் கிராம மாணவர்களுக்கு, நடத்தப்பட்ட ஊரக திறனாய்வு தேர்வு முடிவுகளை, இணையதளத்தில் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் எட்டாம் வகுப்பு தேர்வில், 50 சதவீத மதிப்பெண் பெற்ற, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு, 2012 நவ., 18 ல் நடத்தப்பட்டது. தேர்வுத்துறையில் பழைய பேப்பர் விற்பனையின் போது, ஒரு சில மாணவர்களின் விடைத்தாள்களும் விற்பனை செய்யப்பட்டன. விடைத்தாள்கள் இல்லாத மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, இதற்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், முதல் மதிப்பெண் பெற்ற 50 மாணவர்கள், 50 மாணவிகளுக்கு 12 ம் வகுப்பு படிக்கும் வரை, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக, அரசு வழங்குகிறது. தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment