எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் தேர்வில், ஆங்கில வழி கேள்வி ஒன்று தவறான அர்த்தத்தில் கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் கூறினர். அறிவியல் தேர்வு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் நேற்று அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடந்தது. கேள்விகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டு இருந்தன. இதில் பெரும்பாலான கேள்விகள் சுலபமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், பிரிவு 1–ல் ஒரு மதிப்பெண்ணுக்கான கேள்விகள் நான்கு விடைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதும் அமைப்பில் இருந்தது. இதில், 14–வது கேள்விக்கான அர்த்தம் தமிழ் மொழிக்கும், ஆங்கில மொழிக்கும் முரண்பட்டு இருந்தது. அதாவது, ‘ஒரு கம்பிச்சுருளோடு தொடர்புடைய காந்தப்பாயம் மாறும்போதெல்லாம் அச்சுற்றில் மின்னியக்க விசை உருவாகும் நிகழ்வு............?’ என தமிழில் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு சரியான விடை:– மின்காந்தத் தூண்டல். தவறான அர்த்தம் ஆனால், இதே கேள்வி ஆங்கிலத்தில், தவறான அர்த்தத்தை தருவதாக அமைந்துள்ளது. கேள்வி தவறாக இருப்பதால் ஆங்கில வழி கற்ற மாணவர்கள் குழப்பம் அடைந்து, ஏதோ ஒரு விடையை தேர்வு செய்து எழுதினர்.
இதனால், ஆங்கில வழி மாணவர்கள் 100 மதிப்பெண் பெற முடியாமல் போகும் என அவர்களுடைய பெற்றோர் வருத்தம் தெரிவித்தனர். தேர்வுத்துறை இயக்குனர் பதில் இது பற்றி அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு, இந்த கேள்வி குறித்து விசாரித்து மாணவர்கள் பாதிக்காதவண்ணம் முடிவு எடுக்கப்படும். அந்த கேள்வி தவறாக இருக்குமானால் அந்த கேள்விக்கு உரிய ஒரு மார்க் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment