இரட்டை பட்டப்படிப்பு குறித்த வழக்கு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள் K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று (30.04.2013) "சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE) ஆக விசாரணை நடைப்பெற்றது.
இரட்டை பட்டம் மற்றும் மூன்றாண்டு பட்டம் முடித்தோர் அகிய இரு தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டது. நீதிபதிகள் அரசின் நிலை குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேட்கையில், அரசிடம் ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து. இரு தரப்பு இறுதி விசாரணை ஜுன் 10க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். அதுவரை இடைக்கால தடை மற்றும் விசாரணை நீடிப்பதால், பதவியுயர்வு மற்றும் பணி நியமனம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என நீதிபதிகள் அரசு தரப்பிற்கு தெரிவித்ததாக இவ்வழக்கை தொடுத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Share
No comments:
Post a Comment