பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி 13–ந்தேதி முடிவடையும் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு 15–ந்தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகிறார்கள். அரசு பொதுத்தேர்வு பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதி உள்ளனர். மொழித்தாள் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையிலேயே விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியது.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 55 மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மதிப்பீட்டு பணி வருகிற 13–ந்தேதியுடன் முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு இதற்கிடையே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு, பிளஸ்–2 தேர்வு முடிவடைந்த அன்று அதாவது மார்ச் மாதம் 27–ந்தேதி தொடங்கியது.
No comments:
Post a Comment