ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,க்கு சேர்ந்து, ஒரே நுழைவுத் தேர்வு, இன்று நடக்கிறது. முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள, இந்த நுழைவுத் தேர்வை, நாடு முழுவதும், 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா என, நாடு முழுவதும் உள்ள, 77 நகரங்களில் நுழைவு தேர்வுகள் நடக்கின்றன.
ஆன்-லைன் மூலம் நடக்கும் இத்தேர்வுகள், இன்று துவங்கி, இம்மாதம், 22, 23 மற்றும், 25ம் தேதிகளில் நடக்கின்றன. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட, மூன்று பாடங்களில், 360 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும், 30 கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு கேள்விக்கு, 4 மதிப்பெண் வழங்கப்படுகின்றன. கேள்விக்கு தவறாக விடையளித்தால், மதிப்பெண்கள் குறைக்கப்படும். முதல்கட்ட நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், 1.5 லட்சம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இவர்கள் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
நுழைவுத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்களும், பிளஸ் 2 தேர்வுக்கு, 40 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. இதில், பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் சேர்க்கை நடக்க உள்ளது.
No comments:
Post a Comment