ு.பெண் சிசுக்கொலையை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், எனது ஆட்சி காலத்தில் 1992–ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவான பெண் குழந்தைகள் பெயரில் ரூ.1,500 ரூபாய்க்கான வைப்புத்தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் 2001–ம் ஆண்டு இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு நிதி உயர்வு இதன்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ.22,200 வைப்புத்தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா 15,200 ரூபாயும் வைப்பீடு செய்யப்பட்டது. இந்த தொகை 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும்.
தற்போது இந்த தொகை முறையே ரூ.50 ஆயிரம் என்றும், ரூ.25 ஆயிரம் என்றும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின் கீழ் 1992–ம் ஆண்டு முதல் 1995–ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட பெண் குழந்தைகள் பெறும் முதிர்வுத்தொகை குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டும்; இவர்களுக்கு தற்போது திருமண உதவி திட்டத்தின் பயன் அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு மற்ற திருமண உதவி திட்டங்களுக்கு வழங்கப்படும். இதன்படி, இவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் கல்வி தகுதிக்கேற்ப திருமண உதவித்தொகையும் வழங்கப்படும். 18 வயதில் முதிர்வுத்தொகை இது மட்டுமல்லாமல், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பயனாளிகளின் வைப்புத்தொகைக்கான முதிர்வுத்தொகை அவர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவுடன் வழங்கப்பட்டு வந்தது.
இக்குழந்தைகளின் உயர் கல்விக்கு பயனளிக்கும் வகையில், இந்த முதிர்வுத்தொகை இனிமேல் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் வழங்கப்படும். இதனால், நடப்பு நிதி ஆண்டில் 30 ஆயிரம் பெண்கள் பயனடைவார்கள்.
அங்கன்வாடிகளுக்கு ஞாயிறு விடுமுறை தாய் சேய் நலத்திற்கு வழிகாட்டும் திட்டமான ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு சனிக்கிழமை அன்றும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பணிகள் முற்றிலும் மாறுபட்டு ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதாலும், ஒருவருடைய வேலையை மற்றொருவர் முழுமையாக செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதாலும், இவர்களுக்கு வெவ்வேறு நாட்களில் விடுமுறை அளிப்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கிறது.இதை கருத்தில் கொண்டும், ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் பொது விடுமுறை என்பதாலும், அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் வார இறுதி நாளை மகிழ்வுடன் செலவிடும் வகையில், அவர்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். மேலும், அங்கன்வாடிகளில் சத்துணவு பெறும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட வேண்டிய சத்துணவு, வீட்டிற்கு எடுத்துச்செல்லும் வகையில் சமைக்கப்படாத உணவுப்பொருளாக குழந்தைகளின் பெற்றோர்களிடம் அங்கன்வாடி ஊழியர்களால் சனிக்கிழமை அன்றே வழங்கப்படும்.்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment