ரயில் டிக்கெட் முன்பதிவு, இன்று முதல், 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. காலை, 8:00 மணியிலிருந்து, இந்த மாற்றம், அமலுக்கு வருகிறது. ரயிலில் பயணம் செய்வதற்கு, 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்தது. இவ்வசதியில், இடைத்தரகர்கள் மற்றும் டிராவல் ஏஜன்ட்கள் மூலம், முறைகேடு நடப்பதாக, ரயில்வே அமைச்சகத்திற்கு, புகார் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, பயணிகள் வசதி கருதி, ரயில் டிக்கெட் முன்பதிவு, இன்று முதல், 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, இன்று காலை, 8:00 மணியிலிருந்து அமலுக்கு வருகிறது. நேற்று வரை, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களால், 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயணிகளுக்கான, 120 நாட்கள் பயன்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை.
வெளிநாட்டினர், 360 நாட்கள் வரை, முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இவ்வசதியிலும் எந்த மாற்றமும் இல்லை என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அடையாள அட்டை முறை வருமா? ரயில் டிக்கெட் முன்பதிவு மாற்றம் குறித்து, பயணிகள் தரப்பில் கூறுகையில், "ரயில் டிக்கெட் முன்பதிவு, 60 நாட்களாக குறைக்கப்பட்டதால், இடைத்தரகர்கள், டிராவல் ஏஜன்ட்களின் முறைகேடு குறையும். ரயில்வேயின் முடிவு, வரவேற்கத் தக்கது' என்றனர். மற்றொரு தரப்பினர் கூறியதாவது: முன்பதிவு நாட்களை குறைத்து இருக்க @வண்டாம். 120 நாட்கள் முன்பதிவு அமலிலிருந்த போது, விழா காலங்களில் பயணம் செய்ய, பல நாட்களுக்கு முன், முன்பதிவு செய்து, பயணத்தை உறுதி செய்ய முடிந்தது. முன்பதிவில், முறைகேடு நடப்பதை தவிர்க்க, இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
. முறைகேடுகளை தடுக்க, "தத்கால்' டிக்கெட் முன்பதிவிற்கு , அடையாள அட்டை எண் கேட்பது போல, சாதாரண முன்பதிவிற்கும், அடையாள அட்டை எண்ணை, விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என, கட்டுப்பாடு கொண்டு வரலாம். புதிய நடைமுறையை, மூன்று மாதத்துக்கு ஆய்வு செய்து, பிரச்னை தீராவிடில், பழையபடி, 120 நாட்களாக மாற்றியமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment