இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 10, 2013

2 புதிய மாநகராட்சிகள்: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

  தமிழகத்தில் கூடுதலாக இரு நகராட்சிகள் மாநகராட்சி அந்தஸ்து பெற உள்ளன. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று வெளியிட்டார். இதையடு்த்து தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளுக்கான மான்ய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது.இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தில் தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டசபை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு, தமிழகத்தில்‌‌‌‌‌ திண்டுக்கல், ‌தஞ்சை ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். தவிர ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தபடும். இந்த திட்டத்தின் மூலம் தலா 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக மாற்றப்படும். ரூ. 797 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் : காவிரி ஆற்று நீரை ஆதாரமாக ‌கொண்டு திண்டுக்கல்லில் ரூ. 450 கோடியிலும், தஞ்சைக்கு ரூ. 185 கோடியிலும் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். தவிர திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளுக்கும் காவிரி நீர் மூலம் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும

்.பவானி ஆற்றுநீரை கொண்டு கோவையில் குடிநீர் தி்ட்டம், நெல்லையில் ரூ. 227.26 கோடி மதிப்பில குடிநீர் மேம்பாட்டு திட்டம் என மொத்தம் ‌. ரூ.797 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டங்கள் நடப்பாண்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தவிர காரைக்குடி, சிவகாசி ஆகிய தேர்வு நிலை நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாக மேம்படுத்தப்படும். திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க உயிரி எரிவாயு திட்டத்திற்கு ரூ. 27 ‌கோடி நிதி ஒதுக்கப்படும். இத்திட்டம் திருச்சி, திருப்பூர், ஈரோடு,சேலம், நெல்லை, சேலம் ஆகிய மாநகராட்சிகள் மற்றும் 24 நகராட்சிகளி்ல் செயல்படுத்தப்படும்.நகராட்சி கணக்குகளை பராமரிக்க புதிதாக நகராட்சி கணக்காளர் பணி அமைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்

No comments:

Post a Comment