இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 18, 2013

குரூப்–2, குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி -

புதிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், மேற்கண்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கடந்த மார்ச் மாதம் 12–ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கருத்துகள் எழுந்தன. சட்டசபையிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்து தரமும் குறையாமல் அதே நேரத்தில் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் குறைந்துவிடாமல் மாற்றம் செய்துள்ளோம். தாய்மொழியான தமிழுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து இருக்கிறோம். சிறந்த ஊழியர்களை, அதிகாரிகளை தேர்வுசெய்யும் வண்ணம் ஆப்டிடியூட் எனப்படும் திறனறித்தேர்வு பகுதியையும் சேர்த்துள்ளோம். அரசு பணியில் ஏற்படும் காலி இடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். எனவே, காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் நிரப்பப்படும். தகுதியான பதவிக்கு தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

மீண்டும் 100 கேள்விகள் குரூப்–1 தேர்வைப் பொருத்தமட்டில் தேர்வுமுறை மற்றும் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. நகராட்சி கமிஷனர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்–பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர் போன்ற பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்–2 நேர்காணல் தேர்விலும், அதேபோல், பல்வேறு துறைகளுக்கான உதவியாளர் பதவிகளை உள்ளடக்கிய குரூப்–2 நேர்காணல் அல்லாத பணி தேர்விலும், குரூப்–3 தேர்விலும் அதேபோல் குரூப்–4 தேர்விலும் மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தரத்தில் 100 கேள்விகள் கொண்ட பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கில தேர்வு சேர்க்கப்பட்டு உள்ளது. வி.ஏ.ஓ. தேர்வில் மாற்றம் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) தேர்வில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 30 கேள்விகளுக்குப் பதிலாக 80 வினாக்களும், பொதுஅறிவு தாளில் 100 கேள்விகளில் 25 வினாக்கள் கிராம நிர்வாகம் தொடர்பாக கேட்கப்படும். திறனறிவுத்தேர்விற்கான 20 வினாக்களில் மாற்றம் இல்லை. தேர்வு எழுதுவோர் தமிழை ஆழ்ந்து தெரிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் ஏற்கனவே உள்ள இலக்கணத்துடன் தமிழ் இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தொண்டும் என்ற பகுதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல் பொது ஆங்கிலத்தில் ஆங்கில இலக்கணத்துடன் கூடுதலாக ஆங்கில இலக்கியம், ஆங்கில அறிஞர்களும் தொண்டும் என்ற பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இணையதளத்தில் பார்க்கலாம் குரூப்–2 மெயின் தேர்வில் தேர்வர்களின் பொது விழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரைவு எழுதல் ஆகிய திறமைகளை சோதிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் மூலம் திறமை வாய்ந்த அரசு பணியாளர்களை தேர்வு செய்ய இயலும். புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம். எஸ்.எஸ்.எல்.சி. தரம் கொண்ட குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் தமிழிலும் வெளியிடப்படும். இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் உடனிருந்தார்.

No comments:

Post a Comment