தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1-ந்தேதி தொடங்கிய பிளஸ்-2 தேர்வு மார்ச் 27-ந்தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வினை எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 17-ந்தேதி முடிவடைந்தது. கம்ப்யூட்டர்களில் மதிப்பெண்களை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது. மே 10-ந்தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12-ந்தேதி வரை நடைபெற்றது. 10 1/2 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதன் வினாத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 17-ந்தேதி தொடங்கியது. இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அதன் பிறகு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மே 31-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.
No comments:
Post a Comment