யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் (Optional 1)யில் முதல் தாள், இரண்டாம் தாளும், (Optional 2)யில் முதல் தாள், இரண்டாம் தாள் என மொத்தம் 2000 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் இது பழைய முறையாகும்.
முதல் தாளில் மொத்தம் 300 மதிப்பெண்களும், இரண்டாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும், முன்றாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும், நான்காம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும், ஜந்தாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வின் மூலம் மொத்தம் 1,800 மதிப்பெண்களுக்கும், ஆளுமைத் தேர்வின் மூலம் 275 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். இந்த புதிய முறையை இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment