இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, March 06, 2013

குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும்

  பிப்ரவரியில் நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.திருச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்தாண்டு கணினி மூலம் 11 தேர்வுகளை நடத்தினோம்.

அடுத்த கட்டமாக மடிக்கணினி, ஐபேட் மூலம் தேர்வு நடத்த திட்டமிட்டு வருகிறோம். நவம்பர் 4ம் தேதி குரூப்&2 தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கான நேர்காணல் முடிந்தது. 7ம் தேதி (இன்று) 1,426 பேருக்கு பதவி ஆணை வழங்க உள்ளோம். இதில் 14 பேர் நகராட்சி கமிஷனர்கள். குரூப்&4ல் 1,400 காலி பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கவுள்ளோம்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விஏஓ தேர்வுகளில் தேர்வான அனைத்து தேர்வர்களுக்கும் ஒருவாரத்தில் பணி ஆணை வழங்கப்படவுள்ளது. குரூப்&1 முதல் நிலைத் தேர்வு கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்றது. இதற்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு கருத்துகள் மக்களிடமிருந்து பெறப்பட்டன. குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவு இன்னும் ஒருவாரத்தி ல் வெளியாகும். அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடக்கும்.குரூப்-1 உள்பட அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள 10,500 பணியிடங்களுக்கு இந்தாண்டு தேர்வு நடத்தப்படும். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தாண்டும், அடுத்த ஆண்டும் அதிகமானோர் ஓய்வு பெற உள்ளனர்.டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டம் சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விஏஓ தேர்வு எழுதுவோர் கிராம நிர்வாகத்தை அறிந்திருக்க வேண்டும் என்பதால், அதுபற்றி 24 கேள்விகள் இடம் பெறும் வகையில் வினாத்தாள் அமைக்கப்படும்.

அனைத்து பிரிவு தேர்வுகளுக்கும் வினாக்கள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கணினி மூலம் வினாத்தாள் நட்ராஜ் மேலும் கூறுகையில்,வினாத்தாள் வெளியானது தொடர்பான பிரச்னை தற்போது இல்லை. அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கணினி மூலம் வினாத்தாள் அனுப்ப தயாராகி வருகிறோம். தேர்வு நடைபெறும் நேரத்துக்கு 15 நிமிடத்துக்கு முன்னதாக கணினியில் வினாத்தாளை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். தனி பாஸ்வேர்ட் அளித்து அதை சிறிது நேரத்துக்கு முன்பு எடுப்பது பற்றி ஐஐடி பேராசிரியர்களுடன் விவாதித்து வருகிறோம். அதற்கு தேவையானது அதிகளவு கணினிகள். தற்போது தேர்வு நடக்கும் கல்லூரிகளில் 30 ஆயிரம் கணினிகள் மட்டுமே உள்ளன. நடப்பாண்டில் குரூப்-1, குரூப்-2, குரூப்&-, விஏஓ உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment