இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, March 15, 2013

சர்ச்சைக்குரிய யு.பி.எஸ்.சி. தேர்வு மாற்றங்கள் நிறுத்திவைப்ப

  நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு மற்றும் வலியுறுத்தல்களின் எதிரொலியால், யு.பி.எஸ்.சி. தேர்வில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய மாற்றங்கள் நிறுத்திவைக்கப்பட்டன. இதுதொடர்பான அறிவிப்பை இன்று மக்களவையில் வெளியிட்ட மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, யு.பி.எஸ்.சி. தேர்வு தொடர்பாக மார்ச் 5-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

முன்னதாக, யு.பி.எஸ்.சி. மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அண்மையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,), ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு, புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. வரும் கல்வியாண்டில் முதல், இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. யு.பி.எஸ்.சி., நான்கு மாற்றங்களை கொண்டு வரப்பட்டது. முதல் மாற்றத்தில், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அப்போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் எனக் கூறப்பட்டது. இவ்விதி, இந்தி மொழிக்கு விதிக்கப்படவில்லை. இரண்டாவதாக, பட்டப் படிப்பில் விருப்பப் பாடமாக, தமிழ் இலக்கியத்தை பயின்றவர் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறப்பட்டுள்ளது

. கணிதம், வரலாறு உள்ளிட்ட பிற முக்கிய பாடங்களுக்கு, தமிழ் இலக்கியம் விருப்பப் பாடமாக இருக்காது. அப்படியென்றால், கணிதம், வரலாறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், தமிழில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத முடியாத நிலை உருவாக்கப்பட்டது. மூன்றாவதாக, மாநில மொழிகளில் தேர்வெழுத, குறைந்தபட்சம், 25 மாணவர்கள் அந்த மொழியில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளது. இவ்விதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிக்குப் பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காவதாக, ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெறுவது என்பதாகும். இம்மாற்றம், முழுக்க முழுக்க நகர்ப்புறங்களில், ஆங்கில வழியில் பயன்ற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். யு.பி.எஸ்.சி., செய்துள்ள மாற்றங்கள், இந்திய கூட்டாட்சிக்கும், பிராந்திய மொழிகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கும், பங்கம் விளைவிப்பதாக உள்ளது என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. எனவே, தாய் மொழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக, ஜனநாயகமற்ற முறையில், யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள மாற்றங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment