பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், வரும், 28ல் துவங்கி, ஏப்., 14 வரை, 55 மையங்களில் நடக்கின்றன. கடந்த, 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதி வருகின்றனர். இதுவரை, மொழிப்பாட தேர்வுகள், இயற்பியல், பொருளியல் தேர்வுகள் முடிந்துள்ளன. இன்று, கணித தேர்வு நடக்கிறது. இந்நிலையில், வரும், 28ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணியை துவங்குவதற்கு, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. ஏப்., 14ம் தேதிக்குள், அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணியில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். வழக்கமாக, முதலில், மொழிப்பாட தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியும், படிப்படியாக, இதர தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கும். இம்முறை, 27ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிந்தபின், மறு நாளில் இருந்து, விடைத்தாளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டதற்குப் பின், "டேட்டா சென்டரில்' பாட வாரியாக, மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள் நடக்கும். இந்தப் பணிகள் முடிந்தபின், தேர்வு முடிவு தயாராகும். மே, 10ம் தேதிக்குள், தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Wednesday, March 13, 2013
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: 28ம் தேதி முதல் 55 இடங்களில் நடக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment