- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் உள்ள ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு 2 முறை பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து இப்போது குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை பிப்ரவரி மாதம் 16-ம் தேதி ரூ.1.50-ம் மார்ச் 2-ம் தேதி ரூ.1.40ம் உயர்ந்தது.
டீசல் விலையைப் பொறுத்தவரையில், ஏற்கனவே உள்ள நஷ்டத்தை ஈடு செய்வதற்கு மாதந்தோறும் 50 காசுகள் வரை படிப்படியாக விலை உயர்த்திக் கொள்ளலாம் என ஜனவரி மாதம் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இப்போது டீசல் விலையை லிட்டருக்கு 40 முதல் 50 காசுகள் வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்திருக்கின்றன. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிய விலை நிர்ணயம் நாளையோ அல்லது நாளை மறுநாளோ அமலுக்கு வரும்.
No comments:
Post a Comment