ி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. பெட்ரோல் விலை இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 50 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 45 காசும் உயர்த்தின.
உள்ளூர் விற்பனை வரியையும் சேர்த்து சென்னையில் அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 91 காசும், டீசல் விலை லிட்டருக்கு 55 காசும் அதிகரித்தது. லிட்டருக்கு ரூ.1.78 உயர்வு எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்களில் நேற்று மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 40 காசு உயர்த்தின. இந்த விலை உயர்வு உள்ளூர் விற்பனை வரி அல்லது ‘வாட்’ வரி நீங்கலானது ஆகும். வரியையும் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 78 காசு உயர்ந்தது.
இந்த விலை உயர்வினால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 72 ரூபாய் 17 காசில் இருந்து 73 ரூபாய் 95 காசாக அதிகரித்தது. நள்ளிரவு முதல் அமல் வரியையும் சேர்த்து டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 68 காசு அதிகரித்து, 70 ரூபாய் 74 காசு ஆனது. இதேபோல் வரியையும் சேர்த்து மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 77 காசு அதிகரித்து, 77 ரூபாய் 66 காசு ஆனது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 75 காசு அதிகரித்து, 78 ரூபாய் 34 காசு ஆனது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. விலை உயர்வு ஏன்? கடந்த 15 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 128.57 டாலரில் இருந்து 131 டாலராக உயர்ந்து இருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 53 ரூபாய் 43 காசில் இருந்து 54 ரூபாய் 15 காசாக குறைந்து இருப்பதாலும் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கழகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரமும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப எதிர்காலத்தில் விலையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment