் ரயில்களில், சீசன் டிக்கெட்டுகளை ஒரு ஆண்டு வரை வழங்கும் திட்டம், ஏப்ரல் 1 முதல் அமலாகிறது. ரயில்களில் பயணம் செய்வதற்கு, இதுவரை ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இத்துடன், இந்த வசதியில், வரும் ஏப்ரல், 1ம் தேதி முதல், சீசன் டிக்கெட் ஆறு மாதங்கள் மற்றும் ஒரு ஆண்டு வரையும் வாங்கிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதுபோல், இரண்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படும். ரயில்களில் மாணவர்களுக்கான, ஒரு மாதம் மற்றும், 3ம் மாதங்களுக்கான சீசன் டிக்கெட் பழைய நடைமுறையிலேயே வழங்கப்படும்.
ரயில் பயணம் செய்வதற்கு, "இசாட்' வசதியில் வழங்கப்படும் மாதாந்திர சீசன் டிக்கெட் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச ஒரு மாத சீசன் டிக்கெட் வசதியில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment