் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் புதிதாக பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு தொடர்பாகவும், பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய படிப்புகள் தொடர்பாகவும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
மொழியியல், மொழிபெயர்ப்பு படிப்புகள், மேலாண்மை தொடர்பான போலீஸ் நிர்வாகம், ஃபேஷன் டிசைன் மற்றும் பெண்கள் படிப்பு ஆகியவற்றில் முதுநிலைப் படிப்புகள் புதிதாகத் தொடங்கப்படும். அக்குபஞ்சர் தொடர்பாக இளநிலைப் பட்டப்படிப்பும், ஆங்கிலத்தில் எழுதுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி ஆகியவற்றில் முதுநிலை பட்டயப் படிப்பும், கனரக வாகனங்கள் பராமரிப்பில் டிப்ளமோ படிப்பும் புதிதாக வழங்கப்படும்.
No comments:
Post a Comment