ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் By திருப்பூர், First Published : 16 March 2013 03:10 AM IST 6 ஆவது ஊதிய மாற்ற முரண்பாடுகளை களைந்திடும் வகையிலான 3 நபர் குழு அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி கோரிக்கையை விளக்கினார். மாநில துணைத் தலைவர் ஜான்கிறிஸ்துராஜ் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 6 ஆவது ஊதிய மாற்ற முரண்பாடுகளைக் களைந்திடும் 3 நபர் குழுவின் அறிக்கையை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து முந்தைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வினை கைவிட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக அரசு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாத சந்தா தொகையினை ரூ.50 ஆகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment