பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. அதே நாளில் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த ஆண்டு 10ம் வகுப்பில் 11 லட்சம் மாணவ மாணவி யர் தேர்வு எழுதுவார்கள். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங் கின. நாளையுடன் இந்த தேர்வுகள் முடிகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் முடியும் அதே நாளான 27ம் தேதியே பத்தாம் வகுப்புக் கான தேர்வுகளும் தொடங் குகின்றன. தமிழகம் புதுச் சேரியை சேர்ந்த 10312 பள்ளிகளை சேர்ந்த சுமார் 11 லட்சம் மாணவ மாணவி யர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களுக்காக 3050 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 84000 தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். கடந்த ஆண்டுடன் பழைய பாடத்திட்டம் முடிவுக்கு வந்ததால், மேற்கண்ட அளவுக்கு அதிகமாக தனித் தேர்வர்கள் எழுத வேண்டி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனித் தேர்வர்கள் அளவு இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு கள் காலை 10 மணிக்கு தொடங்கும். கேள்வித் தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.
விடைத்தாளில் பதிவு எண்கள் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. இதையடுத்து 10.15 மணிக்கு விடைகள் எழுதத் தொடங்கி மதியம் 12.45க்கு தேர்வை முடிக்க வேண் டும். மின் தட்டுப்பாடு காரணமாக அனைத்து தேர்வு மையங்களிலும் ஜெனரேட்டர் பொருத்த தேர்வுத் துறை உத்தர விட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது. முறைகேடு களில ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடி யாத அளவுக்கு தேர்வுத் துறை நடவடிக்கை எடுக் கும். ஆள் மாறாட்டம் போன்ற குழப்பங்களை செய்யாமல் இருக்க போட் டோவுடன் கூடிய ஹால் டிக்கெட் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. தேர்வு மையத்திலும் போட்டோவுடன் கூடிய வருகைப் பதிவேடு வைக் கப்பட்டு மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகள் சரிபார்க்கப்படும். நாளை தொடங்கும் 10ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 12ம் தேதியுடன் முடிகின்றன.
No comments:
Post a Comment