தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், செயல்பட்டு வந்த சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 25 சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகள், கடந்த 7 ஆண்டுக்கும் மேலாக, இயங்கி வருகின்றன. அவற்றில் தங்கி, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர்.
இவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் அனைத்தும் வழங்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், ஏப்.,1 முதல், உண்டு. உறைவிட பள்ளிகளை மூடிவிடும்படி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு பயிலும், மாணவர்களை, அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள "ரெகுலர்' பள்ளியில் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறியதாவது: "ரெகுலர்' பள்ளிகளில் சேர்க்கும் போது, இரவில் தங்க வைக்க முடியாது. "ரெகுலர்' பள்ளி மாணவர்களின், படிப்பு வேகத்துக்கு, மாற்றுதிறனாளி மாணவர்கள் ஈடு கொடுக்க முடியாது. அவர்களை பராமரிக்க உதவியாளர் இன்றி, அவதிப்படும் நிலை ஏற்படும்.
வழக்கமான ஆசிரியர்களே பாடம் நடத்துவதால், மாற்று திறனாளி மாணவர்களின் "சைகை' ஆசிரியர்களுக்கு புரியாது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை, அவர்களின் பெற்றோர், காலையில் பள்ளிக்கு அழைத்து வரவும், மாலையில் அழைத்து செல்லவும் முடியாததால், அவர்களின் கல்வி முடங்கும் நிலை உருவாகும், என்றார்.
No comments:
Post a Comment