இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 16, 2013

26 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள்: ஜெயலலிதா உத்தரவு

  தமிழகத்தில் 26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவுள்ள மாதிரிப் பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை தோற்றுவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   
     
   கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகள், மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிப்போருக்கு இணையான சீரான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இப்போது அரியலூர், மங்களூர் (கடலூர் மாவட்டம்), காரிமங்கலம், பாலக்கோடு (தருமபுரி மாவட்டம்), சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் (ஈரோடு மாவட்டம்), குண்டடம் (திருப்பூர் மாவட்டம்), தளி, வேப்பனஹள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்), வேப்பூர் (பெரம்பலூர் மாவட்டம்), நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலம், கொளத்தூர், மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு (சேலம் மாவட்டம்), ஜவ்வாதுமலை (திருவண்ணாமலை மாவட்டம்), திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்), மல்லசமுத்திரம் (நாமக்கல் மாவட்டம்) ஆகிய 26 ஒன்றியங்களில், ஒன்றியத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி வீதம் 26 மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் கொண்ட பள்ளிகளாக வரும் கல்வியாண்டு முதல் இந்தப் பள்ளிகள் செயல்படும்.

இந்தப் பள்ளிகளுக்கான சொந்தக் கட்டடம் கட்டும் வரை, இந்தப் பள்ளிகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கும். பணியிடங்கள் தோற்றுவிப்பு: 26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவிருக்கும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் பணியிடம், ஏழு முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், கம்ப்யூட்டர், உடற்கல்வி, இசை, ஓவியம் ஆகிய ஆசிரியர் பணியிடங்கள் தலா ஒன்று என 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலை உதவியாளர், நூலகர் பணியிடம், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், இரவு காவலாளி, தோட்டக்காரர் என ஏழு ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment