இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 23, 2013

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் கணித வினா எப்படி இருக்கும்?

   மாணவர்கள் குழப்பத்தை போக்குவதற்காக 10ம் வகுப்பு புதிய கணித வினா அமைப்பு குறித்து மாணவர்களிடம் விளக்கமாக தெரிவிக்கும்படி பள்ளிகளுக்கு கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.10ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 27ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு கணித வினாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வராமல் இருந்ததால் வினாத்தாள் எப்படி இருக்கும் என்ற குழப்பமும், அச்சமும் மாணவர்கள் மத்தியில் இருந்தது. இதை தவிர்ப்பதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் புதிய மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதிய வினாத் திட்டப்படி ஏ பிரிவில் கேட்கப்படும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும் 15 வினாக்கள் புத்தகத்தில் எடுத்துக்காட்டு வினா மற்றும் புத்தக வினாவில் இருந்தே கேட்கப்படும். இதுபோல் பி பிரிவில் 2 மதிப்பெண் வினாவில் கிரியேட்டிவ் வினாவாகவும், கட்டாய வினாவாக இருந்த 30வது வினா இப்போது புத்தகத்தில் உள்ள வினாவாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பதில் வினா எண் 16 முதல் 29 வரை உள்ள இரு மதிப்பெண் வினாக்களில் 2 வினாக்கள் கிரியேட்டிவ் வினாவாக கேட்கப்படும். சி பிரிவில் கட்டாய கிரியேட்டிவ் வினாவாக இருந்த கேள்வி எண் 45 இனி புத்தகத்தில் இருந்து கேட்கப்படும். அதற்குப் பதில் 31 முதல் 44 வரை உள்ள வினாக்களில் 2 வினாக்கள் கிரியேட்டிவ் வினாவாக கேட்கப்படும்.

கடந்த ஆண்டு மெய்யெண்கள், இயற்கணிதம், ஆயத்தொலைவுகள், அளவியல் பாடங்களில் இருந்து மட்டுமே கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இப்போது அனைத்துப் பாடங்களில் இருந்தும் கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த விளக்கங்கள் கல்வித்துறையால் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வினா வடிவமைப்பு முறையால் கணிதத்தில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. அதுபோல் 100க்கு 100 மதிப்பெண் எடுப்பவர்களின் எண்ணிக்கையில் இம்முறை அதிகரிக்கும் என கல்வித் துறையால் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment