"அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நான்கு வகை கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்" என, வலியுறுத்தி, தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணயக்குழு தலைவரிடம், மனு கொடுத்தனர். தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில், தனியார் பள்ளி நிர்வாகிகள், நேற்று, டி.பி.ஐ., வளாகத்தில் திரண்டனர். கட்டண நிர்ணய குழு அலுவலகம் முன் திரண்ட அவர்கள்,
"அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நான்கு வகை கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்" என வலியுறுத்தி, கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலுவிடம், மனு அளித்தனர். சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறுகையில், "தற்போது, பல வகைகளில், கட்டணங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. இதை மாற்றி, 1 முதல், 5ம் வகுப்பு வரை, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய்; 6, 7, 8 வகுப்புகளுக்கு, 20 ஆயிரம்; 9, 10 வகுப்புகளுக்கு, 25 ஆயிரம்; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 30 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்க வேண்டும்" என்றார். மனுக்களை பெற்றுக் கொண்ட சிங்காரவேலு,
"சட்டத்திற்கு உட்பட்டு, உரிய கட்டண உயர்வை அளிப்பேன்" என தெரிவித்தார். கட்டண உயர்வு கோரிக்கை மனுவை, கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வனிடமும், பள்ளி நிர்வாகிகள் அளித்தனர். ்
No comments:
Post a Comment