தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது.அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் ஆளுநர் ரோசைய்யா உரையாற்றினார். இதன் மீதான விவாதம் சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இதையடுத்து தேதி குறி்ப்பிடப்படாமல் பட்ஜெட் கூட்டத் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையி்ல், பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அன்றைய தினம் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2013-14ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யும். முதலில் பட்ஜெட் மீதான விவாதமும், பதிலுரையும் இடம்பெறும். அதன்பிறகு துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படும். ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். புதிய சட்டமசோதாக்களும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment