இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 20, 2012

புதிய ஓய்வூதியத்தில் முன்பணம் : கடனாக வழங்க யோசனை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை முன்பணம் கடனாக வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 2004 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. பணிக்காலத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத ஓய்வூதிய தொகையுடன், அதே அளவு பணத்தை அரசும் செலுத்தும்.

அத்தொகை, ஓய்வு பெறும்போது ஒரு பகுதியை கையில் வழங்கும். மற்றொரு பகுதி பங்கு வர்த்தகத்தில் நீண்டகால, குறுகிய கால முதலீடு செய்யப்படும். அதில் கிடைக்கும் லாப தொகை ஊழியருக்கு பின்னாளில் வழங்கப்படும் இத்திட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. எனவே மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் மட்டும் இன்னும் அமல்படுத்தவில்லை. இந்நிலையில் இத்திட்டத்தை ரத்து செய்யும் வரை, இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு முன்பணம் கடனாக வழங்கலாம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏனெனில் ஒவ்வொரு ஊழியரும் ஓய்வு பெறும்போது முழுத் தொகையும் கையில் கிடைக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பர். பங்கு வர்த்தகத்தில் பின்னாளில் கிடைக்கும் தொகை, எந்தளவு நிச்சயம் என தெரியாததால் எதிர்க்கின்றனர். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன் கூறியதாவது:

புதிய ஓய்வூதிய திட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதனை எதிர்க்கும் முதல்வர், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது ரத்து செய்யும் வரை, அத்தொகையில் முன்பணம் கடனாக வழங்கலாம். போஸ்ட் ஆபீஸ், வங்கிகளில் தொடர் வைப்பு கணக்கு மீது கடன் வழங்குகின்றனர். அதுபோல இந்த யோசனையை பரிசீலிக்கலாம், என்றார்.

No comments:

Post a Comment